உள்நாடு

இன்று முதல் பேரூந்து சேவைகள் மட்டு

(UTV | கொழும்பு) – எரிபொருள் பிரச்சினை காரணமாக, பேருந்து சேவைகளை, 50 சதவீதத்தினால் குறைக்கவேண்டி ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

டீசல் இல்லாததால், இன்று முதல் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்படும்.

எனினும், பேருந்து பயணங்களை 50 சதவீதமாகக் குறைத்து சேவை முன்னெடுக்கப்படும்.

இந்நிலையில், சலுகைகளை வழங்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரதன தெரிவித்துள்ளார்.

Related posts

உயர் பாதுகாப்பு வலயத்தில் சட்டவிரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வு!

சைக்கிள் ஓட்டிகள் பாதுகாப்பு ஹெல்மெட் அணிய அறிவுறுத்தல்

கல்வித்துறையில் புதிய சகாப்தம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த