உள்நாடு

இன்று முதல் பேருந்து சேவைகள் மட்டு

(UTV | கொழும்பு) – நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்று முதல் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்மேளனத்தின் தலைமைச் செயலாளர் அஞ்சனா பிரியஞ்சித், 18,000 பேருந்துகளில் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என்றார்.

திங்கட்கிழமைக்குள் 95 சதவீத பேருந்துகள் இயங்காது என பிரியஞ்சித் எச்சரித்துள்ளார்.

தற்போது இயக்கப்படும் பேருந்துகளில் பெரும்பாலானவை குறுகிய தூர பேருந்துகள் என்றும், டீசல் பற்றாக்குறையால் 90 சதவீதத்துக்கும் அதிகமான தொலைதூர பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

200 லிட்டர் அளவுள்ள முழு டேங்க் பல நாட்களாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், மீதமுள்ள எரிபொருளைக் கொண்டு குறுகிய தூர பயணங்களை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் தலைமைச் செயலாளர் கூறினார்.

தனியார் பேருந்துகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சர் மற்றும் பிற அதிகாரிகளை பிரியஞ்சித் கேட்டுக்கொண்டார்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்களுடன் அமைச்சரோ அல்லது எந்த அதிகாரியோ இதுவரை கலந்துரையாடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

யுகதனவி ஒப்பந்தம் : சட்டமா அதிபரின் கோரிக்கை

துறைமுக ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் 2வது நாளாகவும் முன்னெடுப்பு