உள்நாடு

இன்று முதல் பாராளுமன்றத்தில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு

இன்று (05) முதல், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உணவுக்காக 2,000 ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும்.

பாராளுமன்றத்தில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு இந்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்தாலும், இந்த மாதத்திற்கான பாராளுமன்றம் அமர்வு இன்று கூடியதால், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உணவுக்கான குறித்த கட்டணத்தை செலுத்த வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவிற்காக நாளாந்தம் வசூலிக்கப்படும் பணம் 2,000 ரூபாவாக உயர்த்துவதற்கு பாராளுமன்ற சபை குழுவில் கடந்த 23 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, பாராளுமன்ற உணவகத்தில் காலை உணவின் விலை ரூ.600 ஆகவும், மதிய உணவு ரூ.1,200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு கோப்பை தேநீரின் விலை 200 ரூபாய்.

இந்த புதிய விலைகள் பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

 10 மணிநேர மின்வெட்டு

கொழும்பில் கொரோனா பரவல் குறைவடையலாம்

மேலும் 63 பேர் பூரண குணம்