உள்நாடு

இன்று நீர் வெட்டும் அமுலாகும் பகுதிகள்

(UTV | கொழும்பு) – கம்பஹா மற்றும் யக்கல பிரதேசங்களுக்கு இன்று 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு – கண்டி வீதியின் மிரிஸ்வத்தை சந்தியிலிருந்து அளுத்கம – போகமுவ தேவாலய வீதி வரை பிற்பகல் 2 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யக்கல பாலத்தின் திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Related posts

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கே. அபொன்சோ நியமனம்

 தமிழர் தரப்புக்கும் – அரசுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள பேச்சு வார்த்தை கடந்தகாலங்கள் போன்று மாறிவிடக்க்கூடாது

முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிக்க இடமளிக்கப்பட மாட்டாது