உலகம்

இன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகின்றது பிரித்தானியா

(UTV|பிரித்தானியா ) – பிரித்தானியா உத்தியோகபூர்வமாக இன்று(31) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகின்றது.

எனினும், பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான 11 மாத நிலைமாற்ற காலம் உள்ளமையால், பெரும்பாலான விடயங்கள் அப்படியே இருக்கும் என்றும் சில மாற்றங்கள் மட்டும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பிரித்தானியாவின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை இழக்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரெக்ஸிற் தருணத்தில் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து அரசியல் நிறுவனங்களையும் அமைப்புக்களையும் விட்டு வெளியேறும்.

எவ்வாறாயினும், நிலைமாற்றக் காலத்தில் ஐரோப்பிய நீதிமன்ற விதிகளை பிரித்தானியா பின்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அலெக்ஸி நவால்னி கைது

கொரோனாவுக்கு மத்தியில் ‘மோலேவ்’ புயல் – 9 பேர் பலி

பாடசாலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 13 மாணவர்கள் பலி