உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

களுத்துறை – தொடங்கொடை, வில்பாத பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

களுத்துறை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விசேட அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

தொடங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல பதவிப் பிரமாணம்.

editor

அரசு ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்க முடியாது.

வாகன விபத்தில் உப பொலிஸ் அதிகாரி பலி