உள்நாடு

இன்றும் மின்வெட்டு ஏற்படும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து இலங்கை மின்சார சபைக்கு போதிய எரிபொருளை பெற்றுக்கொடுக்காததன் விளைவாகவே ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து எரிபொருள் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கூறியதை அடுத்து வியாழக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சமகி ஐக்கிய தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.

மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தவறியதால் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் வேண்டுமென்றே அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்க முயற்சிக்கின்றாரா என பாலித கேள்வி எழுப்பியுள்ளார்.

டீசல் மற்றும் உலை எண்ணெய் பற்றாக்குறையாக இருந்தால், மின் நிலையங்கள் மூடப்பட்டால், எரிபொருள் நெருக்கடி இருப்பது தெளிவாகிறது என்று அவர் கூறினார்.

வியாழன் அன்று எரிசக்தி அமைச்சர் கூறியது போல் டீசல் இலங்கைக்கு வரவில்லை
எனவே இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை – CID கண்காணிப்பில்

வெசாக் பண்டிகையில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவை

சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்க வேண்டி ஏற்படும்