உள்நாடு

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு!

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழப்பு

மேலும் ஒரு தொகை Sputnik V இலங்கைக்கு