சூடான செய்திகள் 1

இன்றும் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களுடன், அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும்.

இதனுடன் மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கோரியுள்ளது.

 

 

 

 

Related posts

உயிரிழந்த குடும்பத்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு

உதவும் கரங்கள் அமைப்பு விதவைப் பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்

1.5 பில்லியன் இலாபத்தினை திறைசேரிக்கு வழங்கும் லிட்ரோ!