சூடான செய்திகள் 1

இன்றும் நாளையும் விசேட நுளம்பு ஒழிப்பு வே​லைத்திட்டம் முன்னெடுப்பு

(UTV|COLOMBO)-இன்றும் நாளையும் விசேட நுளம்பு ஒழிப்பு வே​லைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

பருவப் பெயர்ச்சி காலநிலை வலுவடைந்துள்ளமை மற்றும் அவ்வப்போது ஏற்படும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்தியநிபுணர் ப்ரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள 8 மாவட்டங்களில், தெரிவுசெய்யப்பட்ட 54 வலயங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 26,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக வைத்திய நிபுணர் ப்ரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தெற்காசியவின் சிறந்த சுற்றுலாத் தளமாக காலி

Breaking News: தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பிலான மனு தள்ளுபடி!

சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று