சூடான செய்திகள் 1

இன்றிலிருந்து அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் பரிசீலனை ஆரம்பம்

(UTV|COLOMBO) அலுகோசு பதவிக்காக 45 விண்ணப்பங்கள் கிடைப்பெற்றுள்ளதாக, சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

விண்ணப்பப்படிவங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று(28) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், பின்னர் நேர்முகப் பரீட்சை நடாத்தி அலுகோசு பதவிக்கான வெற்றிடம் நிரப்படும் என சிறைச்சாலைகள் அமைச்சின் வட்டாரத் தகவல்கள் மேலும், தெரிவிக்கின்றன.

இதேவேளை, அலுகோசு பதவிக்காக வௌிநாட்டுப் பிரஜை ஒருவரை நியமிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றஞ்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர்ப்பட்டியல் சிறைச்சாலைகள் அமைச்சினால், சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

மரக்கறி விலை மீண்டும் அதிகரிப்பு

வீட்டின் பூந்தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது….

இ.போ.ச ஊழியர்கள் வேலைநிறுத்தம்