உள்நாடு

‘இன்னும் 10 நாட்களுக்குள் எரிபொருள்-எரிவாயுவுக்கு தீர்வாம்’

(UTV | கொழும்பு) – எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு அடுத்த 10 நாட்களில் ஏதாவது தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் குறித்த வேலைத்திட்டத்தை மக்களுக்கு அறிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்து சுயேச்சை உறுப்பினர்களுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்ததாக அந்த குழுவின் உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும், எதிர்காலத்தில் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து நாட்டுக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் எல்லாவல தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி அநுரவுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள் – சபாநாயகர்

editor

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது கடற்படை வீரர் குணமடைந்தார்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று அங்குரார்ப்பணம்