உள்நாடு

இந்த ஆண்டில் மாத்திரம் 16,497 பேருக்கு டெங்கு

(UTV | கொழும்பு) – டெங்கு நோய்ப் பரவல் தீவிரமடைந்து வருகிறது.

இந்த ஆண்டில் மாத்திரம் 16,497 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜுலை மாதம் 3,029 பேரும், ஜுன் மாதம் 2,997 பேரும் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களைக் காட்டிலும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் டெங்கு நோய் பரவல் தொடர்பாக மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.

 

Related posts

கரையோர ரயில் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை

லாஹூரில் இருந்து நாடு திரும்பிய 130 இலங்கையர்கள்

New Diamond பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம்