உலகம்

இந்தோனேசியா பயணிகள் விமான தேடுதல் பணிகள் தொடர்ந்தும்

(UTV |  இந்தோனேசியா) – இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவிலிருந்து கடந்த 9ம் திகதி புறப்பட்டு சில நிமிடங்களிலே மாயமாகி விபத்துக்குள்ளானதாக கருதப்படும் போயிங் 737 பயணிகள் விமானம் விழுந்ததாக தாங்கள் கருதும் இடத்தை கண்டறிந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஸ்ரீவிஜயா ஏர் விமான சேவையின் இந்த விமானம் அந்நாட்டின் மேற்கு கேலிமாந்தன் மாகாணத்தில் உள்ள போன்டியானக் என்ற இடத்தை நோக்கி 62 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது சனிக்கிழமையன்று திடீரென மாயமானது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு கடற்படையை சேர்ந்த முக்குளிப்பு வீரர்களுடன் 10க்கும் மேற்பட்ட கப்பல்களும் அனுப்பப்பட்டுள்ளன.

கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அஞ்சப்படும் விமானத்தின் சிதைவுகளாக நம்பும் பொருட்களை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேடுதல் பணி, தற்போது மீளவும் அதிகாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விபத்துக்குள்ளானதாக கருதப்படும் இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் அல்ல என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த மாதம் வரை பாதுகாப்பு காரணங்களுக்கான இந்த ரக விமானங்களின் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எயார் இந்திய விமானம் 324 பயணிகளுடன் தரையிறக்கம்

தென்கொரிய தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார்.