அரசியல்உள்நாடு

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அநுரவை சந்தித்தார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

சமூக ஊடக பதிவில் அவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது.

ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவை சந்திக்க முடிந்ததை கௌரவமான விடயமாக கருதுகின்றேன்.

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்த்துச் செய்திகளை  தெரிவித்தேன்.

இந்திய இலங்கை உறவுகளிற்கான அவரது அன்பான உணர்வுகளிற்கும், வழிகாட்டுதல்களிற்கும் பாராட்டுக்கள்.

தற்போதைய ஒத்துழைப்புகளை மேலும் ஆழமாக்குவது குறித்தும் இருநாடுகளினது மக்களினதும் பிராந்தியத்தினதும் நன்மைக்காக இந்திய இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும்  ஆராய்ந்தோம்

Related posts

நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக ‘ரட்டா’ கைது

துமிந்த சில்வா குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது – சுமந்திரன் எம்.பி

ஜனாதிபதி தேர்தலில் போட்டி – ரணில் அதிரடி அறிவிப்பு.