வகைப்படுத்தப்படாத

இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதி சடங்குகள் இன்று

(UTV|INDIA)-இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதி சடங்குகள் இன்று இடம்பெறவுள்ளது.

இந்திய தலைநகர் புதுடில்லியில் அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் இடம்பெறுவதாக இந்திய தகவல்கள் தெரிவிகின்றன.

அவரது பூதவுடல் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, பின்னர் இறுதிச் சடங்குகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று தடவைகள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த அட்டல் பிஹாரி வாஜ்பேய் தமது 93வது வயதில் நேற்று காலமானார்.

அவர் 1996ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார்.

எனினும் அந்த வருடம் அவர் 13 நாட்களே பிரதமராக பதவி வகித்தார்.

அதனை தொடர்ந்து 1998ஆம் ஆண்டு மீண்டும் பிரதமர் பதவியை ஏற்ற வாஜ்பேய், 13 மாதங்கள் பிரதமராக இருந்தார்.

இறுதியாக 1999 ஆம் ஆண்டு முதல் ஆறு வருடங்களுக்கு அவர் பிரதமராக பதவி வகித்தார்.

இந்தியாவை காங்கிரஸ் கட்சி ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதில் முக்கியமானவராக செயற்பட்ட வாஜ்பேய், இந்தியாவின் முதலாவது காங்கிரஸ் கட்சி அல்லாத பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் அன்னாரின பூதவுடலுக்கு அரசியல் மற்றும் கலைத்துறை பிரபலங்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

MMDA சட்டமூலம் தொடர்பில்: முஸ்லிம் எம்பிகள் கையளித்தவை என்ன ? முழு அறிக்கை இதோ

சட்டவிரோதமாக குப்பை கொட்டிய 400ற்கு மேற்பட்டோர் கைது

ஜனாதிபதியை சந்தித்த இந்தியப் பிரதமர்