உள்நாடு

இந்திய மீனவர்களின் அத்துமீறலை ஏற்க முடியாது – மகேந்திரன்.

(UTV | கொழும்பு) –

இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் வந்து தொழில் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் த.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவர்களின் செயற்பாட்டால் எமது வளங்கள் பாதிக்கப்படுகிறது. அத்துடன் எமது வளங்களை அள்ளி செல்கின்றனர். எமது பகுதி மீனவர்களும் இந்திய கடற்பகுதிக்குள் சென்று கடற்றொழிலில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இதனையே சொல்கிறார். கடந்த காலங்களில் கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணை வழங்க ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கடலட்டை பண்ணை போட்டவர்களுக்கு இலட்சக்கணக்கான லாபமாக கிடைத்துள்ளது.

மேலும் பலர் கடலட்டை பண்ணைக்கு விண்ணப்பித்துள்ளனர். பாரம்பரிய கடற்றொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அவர்களுக்கும் கடலட்டை பண்ணையை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரச நிறுவனங்களுக்கான சுற்றறிக்கை இன்று வெளியாகும்

நாட்டிற்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி

தனது அறிவிப்பை பிற்போட்டுள்ள ரணில் : குழப்பத்தில் அமைச்சர்கள்