சூடான செய்திகள் 1வளைகுடாவிளையாட்டு

இந்திய பெண்ணை கரம் பிடிக்கும் ஹசன் அலி (photo)

(UTVNEWS | COLOMBO) – பாகிஸ்தானின் சகலதுறை வீரர் ஹசன் அலியும் இந்திய பெண்ணை திருமணம் செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹரியானாவை சேர்ந்த சாமியா ஆர்சு என்ற பெண்ணை ஹசன் அலி திருமணம் செய்யவுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துபாயில் பெற்றோருடன் வசித்து வரும் சாமியா ஆர்சு இங்கிலாந்தில் பொறியியல் கல்வியை பயின்றவர் அவர் தற்போது தனியார் விமானசேவையொன்றில் பணிபுரிகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இதுகுறித்து ஹசன் அலி தன்னுடைய ட்விட்டரில், “என்னுடைய திருமணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தெளிவுபடுத்துகிறேன். இரு வீட்டினரும் இன்னும் சந்திக்கவில்லை. விரைவில் அந்த செய்தியை எல்லோருக்கும் தெரிவிப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் பதவியில் இருந்து Mark Boucher இராஜினாமா

இலங்கையின் உணவு பதப்படுத்தும் துணைத் துறையின் வருமானமானது 100 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு – அமைச்சர் ரிசாத் பதியுதீன்…

ஐ.தே.க. உறுப்பினர்கள் இடைநீக்கம் : மனு நிராகரிப்பு