சூடான செய்திகள் 1

இந்திய பிரதமரின் விஜயம் காரணமாக கொழும்பில் இன்று மட்டுப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து!

(UTV|COLOMBO)  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக பாதை மற்றும் கொழும்பை அண்மித்த வீதிகள் சிலவற்றில் இன்றைய தினம்  மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்துக்கள் இடம்பெறவுள்ளன.

அதற்கமைய இன்று  முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 வரை இந்த மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்துக்கள் இடம்பெறவுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க கொழும்பு அதிவேக பாதை, பேஹலியகொடை மேம்பாலம், ஒருகொடவத்தை, தெமட்டகொட, பொரளை ஊடாக கனத்த சுற்றுவட்டம் வரையும் பேஸ்லைன் வீதியின் பொரளை, டீ.எஸ் சேனாநாயக்க சந்தி முதல் ஹோர்டன் பிரதேசம், தாமரை தடாக சுற்றுவட்டம், ஆனந்தகுமார சுவாமி மாவத்தை, பித்தளை சந்தி, யோர்க் விதி, பாரோன் ஜயதிலக்க மாவத்தை, லோட்டஸ் பாதை, ஜனாதிபதி மாவத்தை, காலி முகத்திடல், பழைய நாடாளுமன்றம் வரையும் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்துக்கள் இடம்பெறவுள்ளன.

இதனை கருத்திற் கொண்டு பயணிகள் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

சமாதானத்தின் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை பிறர் புரிந்து கொள்ளப் பிரார்த்திப்போம்

பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்து வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிரூபம் இரத்து

காற்றின் வேகம் அதிகரித்து வீச கூடும்