சூடான செய்திகள் 1

இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இலங்கைக்கு

(UTV|COLOMBO) இலங்கையில் உயிர்த்த ஞாயிறு நடத்தப்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு ஒன்று இலங்கை வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்  இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவுடன் கொண்டிருந்த தொடர்பு குறித்த விபரங்களை அறியும் நோக்கில் இந்த குழு இலங்கை வந்துள்ளது.

ஒருவாரகாலம் இலங்கையில் தங்கவுள்ள அந்த குழு அதற்கு தேவையான விபரங்களை சேகரிக்கும் என்று குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

மேற்படி ஐ.எஸ். பயங்கரவாதிகளது ஆதரவாளர்கள் சிலர் கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துச்சென்றதாக கூறப்படுகிறது.

அத்துடன் அவர்கள் தற்கொலைத் தாக்கதல்தாரிகளுடன் ஏதேனும் தொடர்புகளை பேணியுள்ளனரா? என்ற அடிப்படையில் இந்திய புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

 

 

 

Related posts

கொழும்பு லோட்டஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

ஜூன் மாதம் கல்வியற் கல்லூரிக்கான நேர்முகப் பரீட்சை

மரண தண்டனைக்கு எதிரான மனுவை விசாரணை செய்ய 05 நீதிபதிகள் கொண்ட குழு