உலகம்

இந்திய இராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து : 9 வீரர்கள் பலி, ஒருவர் காயம்! – லடாக்கில் சம்பவம்

(UTV | கொழும்பு) –

லடாக்கில் இந்திய இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 வீரர்கள் பலியாகினர். ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லடாக் யூனியன் பிரதேசம் கரு ஹரிசன் பகுதியில் இருந்து கியாரி பகுதிக்கு இராணுவ வாகனத்தில் வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர்.

நேற்று மாலை 6.30 மணியளவில் கியாரி நகருக்கு 7 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் இராணுவ வீரர்கள் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர், படுகாயமடைந்த வீரர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என லடாக் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குர்-ஆனை பாவிப்பது தொடர்பில் அரசு கொண்டுவரும் புதிய சட்டம்!

தென்கொரிய ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் வெற்றி

editor

ஜார்ஜ் ஃப்ளாய்ட் தீர்ப்பில் முன்னாள் பொலிசார் குற்றவாளி