அரசியல்உள்நாடு

இந்தியா-இலங்கை  தரைப்பாலம் அமைக்கப்பட்டால்  இலங்கையின் இறைமைக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்து!

இந்தியாவிற்கும்  இலங்கைக்கும் இடையில்  தரைப்பாலம் அமைக்கப்பட்டால்  இலங்கையின் இறைமைக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்து என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகிவிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

தென்னிந்தியாவிலிருந்து  ஆக்கிரமிப்பாளர்கள் வந்து நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்தனர் என்பதற்கு எங்கள் வரலாறு முழுவதும் ஆதாரங்கள் உள்ளன என தெரிவித்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் ஒவ்வொரு முறையும் சிங்கள மன்னர்கள் படைதிரட்டி போர்புரிந்து தென்னிந்திய மன்னர்களிடமிருந்து நிலங்களை விடுவிக்கவேண்டிய நிலை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் தரைப்பாலம் ஒன்றை அமைக்கும் திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்கின்றது இதன்காரணமாக இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.

யாருக்கு பாலம்  தேவை? இலங்கை மக்கள் விடுத்த வேண்டுகோள் காரணமாக இந்த திட்டம் குறித்து அவர்கள் ஆராயவில்லை வெளிநாட்டவர்களின் வேண்டுகோள்கள் காரணமாகவே ஆராய்கின்றனர் எனவும்மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வரும் உத்தரவுகள் நன்மையானவையா தீமையானவையா என ஆராயாமல் அவை அனைத்தையும் நிறைவேற்றும்உறுதிப்பாட்டுடன் அரசாங்கம் உள்ளது,எங்களிற்கு நன்மையளிக்காத விடயத்தை நாங்கள் செய்யக்கூடாது இது குறித்து அவதானமாகயிருக்கவேண்டும், இல்லாவிட்டால் தற்போது காணப்படும் நிலைமையை விட இன்னமும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவோம் எங்கள் இறைமை சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எதனையும் செய்ய கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

 தனியார் வகுப்பில் கலந்து கொண்ட மாணவி துஷ்பிரயோகம்!

சங்கு சின்னத்தில் களமிறங்க தீர்மானம் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

editor

கொவிட் தொற்றால் 43 பேர் பலி