உலகம்

இந்தியாவில் 1 மில்லியனை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

(UTV|இந்தியா) – இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கைய இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 35,468 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைர தொற்றினால் 1,005,637 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25,609 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களில் பன் மடங்காக அதிகரித்துள்ளதுடன், உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றில் இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது.

இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டர்வகளின் எண்ணிக்கை 13,949,432 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 592,690 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இந்தியாவுடனான விமான சேவைகள் நாளை முதல் இரத்து

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.75 இலட்சத்தை கடந்தது

facebook இற்கு 725 மில்லியன் டாலர் அபராதம்