உலகம்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு கொரோனா

(UTV | இந்தியா) – இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“வேறு காரணத்துக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது, அங்கு எனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

தென்கிழக்காசிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகள்

இஸ்ரேல் மீது ஈரான் தனது வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது

சீன அதிபரிடம் மன்னிப்பு கேட்ட பேஸ்புக்