வகைப்படுத்தப்படாத

இந்தியப் பிரதமர் நாளை இலங்கை வருகிறார்

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய நாடுகளின் 14 வது சர்வதேச வெசாக் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாளை இலங்கை வருகிறார்.

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் வெசாக் தின நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.

கொள்ளுப்பிட்டி கங்காராம விஹாரையில் நடைபெறும் விசேட மத வழிபாட்டு நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்வார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இந்தியப் பிரதமர் நாளை இரவு சந்தித்து பேசவுள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு செல்லவிருக்கும் இந்தியப் பிரதமர்இ அஸ்கிரி மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களையும் சந்திக்க உள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியோடு நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹட்டன் – திக்ஓயா ஆரம்ப வைத்தியசாலையின் புதிய வோட் தொகுதிகளையும் அவர் திறந்து வைப்பார்.

Related posts

களுத்துறையில் மண் சரிவு

18 மாவட்ட பாடசாலை கல்லூரிகளுக்கு விடுமுறை

Deshapriya wins bronze medal in Asia Para TT championships