வகைப்படுத்தப்படாத

இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி விசேட இராப்போசன விருந்து

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச வெசாக் தின நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நேற்றிரவு  விசேட இராப்போசன விருந்து கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மாளிகைக்கு வருகைதந்த இந்திய பிரதமரை ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

பிரதமர் ரனில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் இதில. கலந்துகொண்டனர்.

Related posts

போக்குவரத்து அபராத சீட்டை வீட்டிற்கே அனுப்பும் திட்டம்

கனமழை காரணமாக 3 மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

Premier opens ‘Enterprise Sri Lanka’ exhibition in Anuradhapura today