விளையாட்டு

இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான புதிய லோகோ வெளியீடு

(UTV | இந்தியா) – இந்தியன் பிரீமியர் லீக் (IPL)இனது 13வது தொடர் எதிர்வரும் செப்டம்பர் 19ம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) ஆகிய அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுவிட்டன. சென்னை சுப்பர் கிங்க்ஸ் (CSK) அணி நாளை துபாய்க்கு புறப்படுகிறது.

மேலும், ஐ.பி.எல். சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், டைட்டில் ஸ்பான்சர் மாறியிருப்பதால், புதிய லோகோவை வடிவமைத்து வெளியிட்டுள்ளது ஐ.பி.எல். நிர்வாகம். இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினையின் விளைவாக சீன நிறுவனமான விவோ நிறுவனத்துடனான ஐ.பி.எல். டைட்டில் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ஐ.பி.எல். 13வது தொடருக்கான Dream 11 ஐ.பி.எல். என்ற புதிய லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. அந்த புதிய லோகோவை, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஐ.பி.எல். நிர்வாகம்,புதிய லோகோ எப்படியிருக்கிறது என்று ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உலக கிண்ணம் குறித்து கருத்து தெரிவித்த ரிக்கி பொண்டிங்…

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி

உலகை வென்று இன்று பத்து ஆண்டுகள்