உள்நாடு

இதுவரையில் 3,180 பேர் கைது

(UTV | கொழும்பு) – முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள கொவிட்-19 வழிகாட்டல்களை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக இன்று(19) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 3,180 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள கொவிட் வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்த இன்றைய தினமும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை தொடரும் என்றும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் உச்ச பாதுகாப்புக்கு மத்தியில் 9 சடலங்கள் அடக்கத்திற்கு

எங்களை விரட்டுவதற்கு செலவிட்ட பணத்தை கல்விக்கு கொடுங்கள் – சஜித்

SIS அதிகாரி உயிரிழந்த விபத்து தொடர்பில் கைதான சட்டத்துறை மாணவனுக்கு பிணை