உள்நாடுசூடான செய்திகள் 1

இதுவரையில் 2,849 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொவிட் -19 (கொரோனா) வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 07 நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று(29) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,849ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 128 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 2,989 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“ஹுஸ்ம தென துரு” தேசிய மர நடுகை திட்டம்

மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஓய்வடைகிறார்