உள்நாடு

இணைய மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு.

(UTV | கொழும்பு) –

ஆண்டின் கடந்த 5 மாதங்களில் இணைய மோசடி தொடர்பாக 1,093 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், சமூக ஊடகங்கள் தொடர்பில் 7,916 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுணுகல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த சருக தமுணுகல, இரண்டு மாதங்களுக்குள் சிறுவர்கள், குறிப்பாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 27 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

குறித்த முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஹஜ் விவகார சர்ச்சை : திங்கள் உயர் நீதிமன்றில் வழக்கு

மேலும் 17 கடற்படையினர் பூரண குணம்

பிரதான PCR இயந்திரத்தில் கோளாறு : சீனாவிலிருந்து தொழில்நுட்பாளர் அழைப்பு