உள்நாடுசூடான செய்திகள் 1

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளை

(UTV | கொழும்பு) – அரச செலவுகள் உள்ளடங்கிய இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளை(27) மற்றும் நாளை மறுதினம் (28) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த வருடத்தின் இறுதி 04 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி அடுத்த நான்கு மாத செலவினங்களை ஈடுகட்ட 950 பில்லியன் ரூபாய் மதிப்பீட்டு பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த மதிப்பீட்டை நிதியமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 21ம் திகதி முன்வைத்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்பிக்கப்படவுள்ளது. எனவே எதிர்வரும் மாதங்களுக்கான அரச செலவீனத்தை கருத்தில் கொண்டு இந்த இடைக்கால கணக்கறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

அடுத்த நான்கு மாத செலவினங்களை ஈடுகட்ட 949.736 ருபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு சம்பவம்; துப்பாக்கிதாரி கைது

“கொள்கைப் பிடிப்பிலேயே மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டேன்”

சஜித், அனுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து சம்பள அதிகரிப்பு யோசனையை நீக்கி விடுங்கள் – ஜனாதிபதி ரணில்

editor