விளையாட்டு

இடியப்பச் சிக்கலுக்கு வருந்துகிறேன் – நாமல்

(UTV | கொழும்பு) –  கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய வீரர் ஒப்பந்தங்கள் குறித்து உடன்பாடு எட்டப்படாமை குறித்து வருந்துகிறேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“‘… கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய வீரர் ஒப்பந்தங்கள் குறித்து உடன்பாடு எட்டப்படாமை குறித்து வருந்துகிறேன்.

எங்கள் வீரர்களை போட்டித்தன்மை மிக்க கொடுப்பனவை நோக்கி ஊக்குவிப்பது முக்கியமான போதிலும், நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் இதனை ஒரு தீர்க்கமான காரணியாக கொள்ளக் கூடாது.

விளையாட்டு வீரர்கள் எப்போதும் நாட்டிற்கு முதலிடம் வழங்கி விளையாட்டில் ஈடுபட வேண்டும்..” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொரோனா – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உயிரிழப்பு

ஒலிம்பிக் அங்கீகாரத்தை இழந்த பெலருஸ் பயிற்சியாளர்கள்

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான தொடர் தற்காலிகமாக ஒத்திவைப்பு