விளையாட்டு

இங்கிலாந்திடம் ஆஸி வீழ்ந்தது

(UTV | கொழும்பு) –  ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் அவுஸ்திரேலியா அணியை எதிர்த்தாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அணித்தலைவர் ஆரோன் பின்ச் அதிகபட்சமாக 44 ஓட்டங்களைப் ​பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் றிஸ் ஜோர்டான் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, 126 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதல் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 11.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடிய ஜோஸ் பட்லர் 71 ஒட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

Related posts

U-19 ஆசிய கிண்ணத்தை வென்ற பங்களாதேஷ் அணி!

சங்கக்காரவின் பதவிக்காலம் நீடிப்பு

டி20 உலகக் கிண்ணம் : 3 விக்கெட் வித்தியாசத்தில் UAE வீழ்ந்தது