உள்நாடு

ஆளுங்கட்சியினர் பிரதமரை சந்திக்கின்றனர்

(UTV | கொழும்பு) – ஆளுங்கட்சியின் முக்கியமான கூட்டமொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

கெரவலப்பிட்டி யுகதனவி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்காவிற்கு வழங்கியமை தொடர்பில் ஏற்கனவே நடந்துள்ள பல சந்திப்புகளில் கோரிய விளக்கங்களுக்கு தெளிவான பதில் கிடைக்காத காரணத்தால் இன்றைய கூட்டத்தில் ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் கேள்விகளை எழுப்பவுள்ளதாக தெரியவருகின்றது.

அதேவேளை, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஷ்ரிங்லா திருகோணமலை எண்ணெய்க்குதங்கள் பகுதிக்கு சென்றுள்ளதால், அங்கு இந்தியாவிற்கும் புதிதாக இடங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பன தொடர்பில் பங்காளிக்கட்சிகள் இன்று வினவவிருப்பதாக தெரியவருகிறது.

Related posts

மலேசிய முன்னாள் பிரதமருக்கு தண்டனைக் காலம் குறைப்பு!

ரூபா 5000 : வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு முன்னுரிமை

பெலாரஸ் நாட்டில் இலங்கையர் சடலமாக மீட்பு!