சூடான செய்திகள் 1

ஆளுங்கட்சியினரின் திடீர் தீர்மானம்

(UTV|COLOMBO)-நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளுங்கட்சியினர் இன்றைய தினத்திலும் நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை , இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பொதுமக்கள் மற்றும் சபாநாயகரின் சிறப்பு விருந்தினர்களுக்கான பார்வையாளர் கூடங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் இன்று பார்வைக்கூடத்தில் அனுமதி வழக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய தேசிய கட்சியினரால் சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியுடன் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தொடர்பிலேயே இந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

அலோசியஸ்- பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

ஜோன்ஸ்டன் பெனான்டோவுக்கு எதிரான 4 வழக்குகளும் ஒத்திவைப்பு

பெண் சட்டத்தரணி ஒருவர் கைது