உள்நாடுவணிகம்

ஆயிரம் ரூபா கனவு கக்குமா?

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 29ம் திகதி பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான தீர்மானமிக்க பேச்சுவாரத்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச இந்திய வம்சாவளி தின நிகழ்வு கண்டிக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராகேஸ் நடராஜ் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் அது குறித்து தெரிவித்தார்.

ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிப்பு குறித்து பேச்சுவார்த்தையின் போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. நீண்ட காலமாக ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி பேச்சுவாரத்தைகள் இடம்பெற்று வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

கோட்டை பொலிஸ் நிலையம் மீள திறப்பு [UPDATE]

டெங்கு நோய் பரவும் அபாயம்

பூங்காக்களுக்கு பூட்டு