வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தான் – தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் என்னும் இடத்தில் நேற்று  நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அதிபர் அஷ்ரப் கானி பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்பட்டு சென்றவுடன் முக்காபெரட் சதுக்கம் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இந்துக்கள், சீக்கியர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது எனவும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சீக்கியர்கள் மற்றும் இந்துக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்களை குறிவைத்து நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Malinga seals Sri Lanka win in his Final ODI

புயல் தாக்கியதால் 30 பேர் பலி

வைத்தியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக முடங்கிய வைத்தியசாலைகள்