கேளிக்கை

ஆன்மீக வழியில் சமந்தா

(UTV | இந்தியா) – நடிகை சமந்தா விவாகரத்து அறிவிப்புக்குப் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அது மட்டுமின்றி வட இந்திய ஆன்மிகச் சுற்றுலாவுக்கு தனது தோழியுடன் சென்றார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் ஆன்மிகச் சுற்றுலாவுக்கு சென்று உள்ளார். அண்மையில் அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அதனை அடுத்து கடப்பாவில் உள்ள மசூதி ஒன்றுக்கும் சென்றுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் கடப்பா தர்காவுக்கு சமந்தா விசிட் அடித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறன.

விக்னேஷ் சிவன் இயக்கிவரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் யசோதா, சாகுந்தலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, மேலும் இரண்டு தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Related posts

உண்மையிலேயே திருமணம் செய்வாரா ஆர்யா?

பிரபல நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில்!

‘லைகர்’ படத்தில் நடிக்கும் ‘மைக் டைசன்’