உள்நாடு

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களின் தேசிய எதிர்ப்பு தின போராட்டம்

(UTV | கொழும்பு) – சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குமாறுகோரி, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று தேசிய எதிர்ப்பு தின போராட்டத்தை முன்னெடுக்க உள்ளன.

இதற்கமைய, வலயக் கல்விப் பணிமனைகளுக்கு முன்னால், இந்தப் போராட்டம் முன்னெக்கப்பட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பில் லிப்டன் சுற்று வட்டப் பகுதியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

Related posts

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய மதுபானசாலைகளுக்கு பூட்டு

குரங்கு அம்மை : தொற்று அபாயம் பற்றிய விழிப்புணர்வு

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 30 பேர் கைது