சூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் ரிஷாத் தலைமையில் சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு

(UTV|COLOMBO) மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகங்களுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 10,113 சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு நேற்று  (08) மன்னார் நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.

 சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தின் இன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே கலந்து கொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

இன்று(21) காலை முதல் மின்சாரம் தடை

நாட்டின் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி

24 பேர் அதிரடியாக கைது