உலகம்

அஸ்ட்ரா ஜெனகா தொடர்பில் WHO இனது நிலைப்பாடு

(UTV | கொழும்பு) – அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி செலுத்துவது தொடரவேண்டும் என்று உலக நாடுகளை உலக சுகாதார நிறுவனம் (WHO) கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சில பக்கவிளைவுகள் இந்த மருந்தில் காணப்படுவதாக புகார் எழுந்துள்ளதாகவும், இதனால் தற்காலிக தடை விதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அஸ்ட்ரா ஜெனகா மருந்தின் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து வருவதாகவும், அதன் பாதுகாப்புத்தன்மை குறித்து ஆய்வு முடிந்ததும் அறிவிக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஐரோப்பிய மருத்துவ அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், நிலைமையையும், மருந்தின் பாதுகாப்புத்தன்மையையும் கவனமாக கண்காணித்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Related posts

அமெரிக்காவில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

நியூசிலாந்தில் அவசர நிலை பிரகடனம்!

பிரதமர் கொலை முயற்சி : 14 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை