அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

அவசரமாக கூட்டுகிறது பாராளுமன்றம் – தேர்தல்கள் தொடர்பில் அறிவிப்பு

கௌரவ பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16ற்கு அமைய 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றத்தின் இந்த விசேட அமர்வானது கௌரவ சபாநாயகர் அவர்களினால் 2025.02.10ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2423/04 ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அன்றையதினம் பாராளுமன்றம் மு.ப 9.30 மணிக்கு கூடவிருப்பதுடன், இதில் கலந்துகொள்ளுமாறு கௌரவ சபாநாயகர் சகல கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார்.

அன்றையதினம், உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்மானம் சபாநாயகரினால் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவுள்ளது.

அத்துடன், குறித்த சட்டமூலத்தை ஆராயும் நோக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும் அன்றையதினமே (14) கூடவுள்ளது.

Related posts

இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் தகவல்களை அரசாங்கம் வெளியிட வலியுறுத்தல்

பதிவு செய்தலுக்காக 33 புதிய கட்சிகள் விண்ணப்பம்

மறு அறிவித்தல் வரும் வரையில் களனி பல்கலைக்கழகத்திற்கு பூட்டு