சூடான செய்திகள் 1

அலோசியஸ் உடன் தொலைபேசியில் உரையாடியவர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அறிக்கை

(UTV|COLOMBO)-பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் இவ்வாரம் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட உள்ளது.

அர்ஜுன் அலோசியஸிடம் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பணம் பெற்றதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என அரசியல் கட்சி உறுப்பினர்களும் சிவில் அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் அர்ஜுன் அலோசியஸ் உடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தன்னிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி செயலாளரிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்படி, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணாந்து அது தொடர்பில் நீதிபதிகளின் ஆலோசனைகளை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் அர்ஜுன் அலோசியஸிடம் இருந்து பணம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் சீ 350 என்ற அறிக்கை பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இலங்கை – ஜோர்ஜியா நட்புறவை மேம்படுத்துவது தொடர்பில் இருநாட்டு அரச தலைவர்களும் கவனம்

சர்வதேச ஒலிம்பிக் தின கொண்டாட்ட நிகழ்வு இன்று மாத்தறையில்

தாதியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்