வகைப்படுத்தப்படாத

அலுவலக ரயில் சேவைகளில் சிக்கல் இல்லை

(UTV|COLOMBO)-ரயில் சாரதிகளின் பிரச்சினைகள் நீடித்தாலும், அலுவலக ரயில் சேவைகளில் சிக்கல் எதுவும் இல்லை என்று ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட பெட்டிகளுடன் கூடிய ரயில் வண்டிகளை செலுத்தும் சாரதிகளின் போராட்டம் தொடர்ந்து நீடிப்பதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் நேற்று அறிவித்தது.

எவ்வாறேனும் இன்று காலை அலுவலக ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதில் எதுவித சிக்கலும் இருக்காது என்று கட்டுப்பாட்டு நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும், மட்டக்களப்பு ரயில் வண்டியை சேவையில் ஈடுபடுத்துவதில் மாத்திரம் தடைகள் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

China’s Sinopec sets up fuel oil unit in Sri Lanka

வட இந்தியாவில் புழுதிப்புயல் மற்றும் கனமழை – 74 பேர் பலி

பிலிப்பைன்சில் கடும் மழை, நிலச்சரிவு – 4 பேர் உயிரிழப்பு