வகைப்படுத்தப்படாத

அலுவலகத்துக்குள் காட்டை உருவாக்கிய அமேசான்

(UTV|AMERICA)-அமெரிக்காவில் ‘மைக்ரோசாப்ட்’, ‘பேஸ்புக்’, ‘ஆப்பிள்’ என அனைத்து நிறுவனங்களும் புதிதாக டிரெண்டிங் முறையில் அலுவலகம் கட்டி வருகிறது.

இதுபோன்று அமேசான் நிறுவனம் புதிய வடிவில் வித்தியாசமாக கட்டிடம் கட்டுகிறது. தற்போது இந்த நிறுவனம் தனது அலுவலகத்தில் சிறிய ‘அமேசான் காடு’ உருவாக்கியுள்ளது. உள்ளே நிறைய மரங்களை நட்டு இருக்கிறது.

இந்த அலுவலகத்தில் 3 குருவிக்கூடு போன்ற கூடு இருக்கும். ஒவ்வொரு கூட்டுக்குள்ளும் 800 பேர் வரை தங்க முடியும். இதற்குள் பெரிய மரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஆங்காங்கே சிறு சிறு அருவிகளும் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் காட்டுக்குள் இருக்கும் உணர்வு ஏற்படும்.

இந்த பணிக்காக மொத்தம் 600 பேர் அமர்த்தப்பட்டுள்ளனர். உலகின் பல பகுதிகளில் இருந்து முக்கிய படங்களின் ஆர்ட் டைரக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 3 வருடங்களாக அலுவலகத்தை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி வடிவமைத்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Austria orders arrest of Russian in colonel spying case

இறுதி மணித்தியாலம் வரை போராடப் போவதாக ஏஞ்சலா மேர்க்கல் தெரிவிப்பு

SLFP to discuss SLFP proposals today