உள்நாடு

அலி சப்ரி ரஹீம் MP பிணையில் விடுவிப்பு.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்  இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு புத்தளம் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அலி சப்ரி ரஹீம் இன்று (20) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜரான போது, ​​அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வன்முறை தற்போதைய பிரச்சினைகளை தீர்க்காது

மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு

மகிழ்ச்சியுடன் ஆதரிப்போம் – நாளை வரை காத்திருங்கள் – மஹிந்த.