உள்நாடுசூடான செய்திகள் 1

மதவாதம் பேசிய தேரர் அதிரடியாக கைது!


(UTV | கொழும்பு) –

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் ராஜாங்கனை சத்தா ரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூக வலைதளங்களில் ஆபாசமான வார்த்தைகளை பதிவிட்டு வரும் ராஜாங்கனை சத்தா ரதன தேரரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மத நல்லிணக்கம் மற்றும் பௌத்த ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் செய்த முறைப்பாட்டிற்கமைய, குறித்த தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தேரரின் கருத்துக்களை சிலர் ஏற்றுக் கொண்டாலும் பலர் அதற்கு கடும் எதிர்ப்பும், வெறுப்பும் தெரிவித்துள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 82 பேர் கைது

கே.டி லால்காந்த பிணையில் விடுதலை

நாளை முதல் அனைத்து வரித் திருத்தங்களும் அமுலுக்கு [VIDEO]