வணிகம்

அலங்கார மீன் உற்பத்திகளை மேம்படுத்த திட்டம்

(UTV|COLOMBO)-ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு நாட்டின் அலங்கார மீன் உற்பத்திகளை மேம்படுத்த மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் புதிய அலங்கார மீன்களை அறிமுகப்படுத்தல், இனப்பெருக்கம், நோய் பரவலைத் தடுத்தல், போசாக்கான மீன் வகைகளை உணவுக்காக அறிமுகப்படுத்தல் மற்றும் பண்ணையாளர்களை பயிற்றுவித்தல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அலங்கார மீன் தயாரிப்புகளை மேம்படுத்தும் பொருட்டு, பொலன்னறுவை – செவனப்பிட்டிய மற்றும் புத்தளம் – பங்கதெனிய ஆகிய பகுதிகளில் இரண்டு அலங்கார மீன் மையங்களை ஸ்தாபிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் இறுதி நாள்

இலங்கைக்கும் டியூனிசியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மீள ஆரம்பிப்பு

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு