உள்நாடு

அறுகம்பை தாக்குதல் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 6 பேர் கைது

அம்பாறை, அறுகம்பை பிரதேசத்தில் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 6 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களை இலக்கு வைத்து அறுகம்பை பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அண்மையில் தகவல் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரூ.5000 இதுவரை வழங்கப்படாதவர்களுக்கான அறிவிப்பு

கொழும்பு கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து

editor

“தேர்தல்களை விகிதாசார முறைப்படியே தொடர்ந்தும் நடத்த வேண்டும்” -ACMC வலியுறுத்து