உள்நாடு

அறிமுகப்படுத்தப்படும் புதிய வரி!

(UTV | கொழும்பு) –

எதிர்காலத்தில் மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது வரி சதவீதத்தை அதிகரிக்கவோ எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

மறைமுக வரி விதிப்பால் பொருட்களின் விலை உயராது என்றும், பொருட்களின் தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, 2025ஆம் ஆண்டு புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சொத்து வரி என்பது நேரடி வரி என்றும், அதிக சொத்து வைத்திருப்பவர்களிடம் வசூலிக்கப்படும் குறிப்பிட்ட தொகைதான் வரி என்றும் நிதித்துறை அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முஸ்லிம் உலகம் ஒன்றுபட்டு ஸியோனிஸவாதிகளை எதிர்க்க ஆயத்தமாக வேண்டும்

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைப்பு

editor